‘பிகில், திகில் எதுவா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்’.. அமைச்சர் ஜெயக்குமார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

‘பிகில், திகில் எதுவா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்’.. அமைச்சர் ஜெயக்குமார்..!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். மேலும் மானிய விலையில் பைபர் படகுகள், இஞ்ஜின் உள்ளிட்ட மீன்பிடி சாதங்களை மீனவர்களுக்கு வழங்கினார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒகி போன்ற புயல் காலங்களில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் மீனவர்களின் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்தியாவிலே தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன’ என பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் படம் எடுத்து வெளியிடலாம். ஆனால் சிறப்பு காட்சிகள் என்ற பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அமைச்சர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். பிகில், திகில் என எந்த படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது’ என தெரிவித்துள்ளார்.

VIJAY, BIGIL, BIGILDIWALI, MINISTER, JAYAKUMAR, SPECIALSHOW