'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்?

ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலம் முதன்முதலாக கொல்கத்தாவில் இன்று நடைப்பெற்று வருகிறது. இதில், மொத்தம்  8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே அந்தந்த அணிகள் வீரர்களை ரிசர்வ் செய்துள்ள நிலையில், மீதமுள்ள 73 வீரர்களுக்கான ஏலம் தற்போது நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த, ஆஸ்திரேலிய வீரரான கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய் விலையில் ஏலத்தில் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.9 .6 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின், 12-வது ஐ.பி.எல். தொடரில் 13 ஆட்டங்களில் மொத்தம் 405 ரன்கள் சேர்த்து இருந்தார். இவர் ரன் வேட்டையில் கில்லாடி என்றாலும், அவரது ஆட்டம் சீராக இல்லாததால் கொல்கத்தா அணி அவரை கழற்றி விட்டது. இதனால் கிறிஸ் லின் மீண்டும் ஏலத்திற்கு வந்தார். 

ஆனால் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் 30 பந்தில் 91 ரன், 33 பந்தில் 89 ரன்கள் என்று  ரன்வேட்டை நடத்தி பிரமாதப்படுத்தினார் கிறிஸ் லின். தற்போது நல்ல பார்மில் இருந்ததால், முதல் வீரராக ஏலத்தில் களமிறக்கப்பட்ட கிறிஸ் லின்னை, அவரின் அடிப்படை விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தூக்கியுள்ளது.

IPL, CHRISLYNN, IPL2020