‘தல’ ஸ்டைலில் ஃபினிஸிங் சிக்ஸ்.. ‘ருத்ர தாண்டவம் ஆடிய ரஸல்’.. மும்பைக்கு இமாலய இலக்கை வைத்த கொல்கத்தா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 47 -வது போட்டி இன்று(28.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சுபமன் கில் மற்றும் கிறிஸ் லின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் சுபமன் கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய ரஸல் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். பின்னர் கடைசியில் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
Finishing the innings with a MASSIVE SIX - courtesy DRE RUSS 💪💪 pic.twitter.com/ZVm91qpuae
— IndianPremierLeague (@IPL) April 28, 2019
Andre Russell is our key performer for the #KKR innings for his stupendous knock of 80* off 40 deliveries.#KKRvMI pic.twitter.com/f2dMFLtnSY
— IndianPremierLeague (@IPL) April 28, 2019