‘கேட்ச் பிடித்த ரிஷப் பண்ட்’..‘அவுட்டை மறுத்த விராட் கோலி’.. போட்டியின் நடுவே நடந்த த்ரில் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி படு தோல்வியடைந்தது.
ஐபிஎல் டி20 லீக்கின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 50 ரன்களும், ஸ்ரேயாஷ் ஐயர் 52 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பார்தீவ் பட்டேல் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 32 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இப்போட்டியில் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் ஷர்மா வீசிய ஓவரில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து தரையில் பட்டு ரிஷப்பின் கைக்கு சென்றது. இது மூன்றாம் நடுவரின் சோதனைக்கு பிறகு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.
WATCH: When Virat was quicker than the Third Umpire 😎😎
— IndianPremierLeague (@IPL) April 28, 2019
Full video here ▶️▶️https://t.co/ElvGxIo71r #DCvRCB pic.twitter.com/VThDypQA0n