‘விமர்சனங்களுக்கு சிக்ஸர்களால் பதிலடி’..பொளந்து கட்டிய ‘கிங்’கோலி-மிஸ்டர் 360.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கை ராயல் சேல்ஞ்சர்ஸ் நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 17 -வது போட்டி இன்று(05.04.2019) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் அணி முனைப்பு காட்டி வருகிறது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பார்தீவ் பட்டேல் களமிறங்கி அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் பார்தீவ் பட்டேல் 25 ரன்களில் வெளியேற அடுத்த ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கோலி கூட்டணி கொல்கத்தா பந்துவீச்சளகளை திணறடித்தது. 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. இதில் கோலி 84 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.