VIDEO: ‘விராட் கோலி விக்கெட் எடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்கா’.. யாருப்பா அவரு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா 165 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் நியூஸிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னெரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே நிதானமாக விளையாடி 50 ரன்களை எடுத்தார். இந்நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை இந்தியா எடுத்தது. இதனைத் தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.
Flying Santner #INDvNZ #INDvsNZt20 #ViratKohli #Virat #IndiaVSNewZEaland #Cricket #cricbuzzlive
Nice way to dismiss a world class batsman.#hamishbennet pic.twitter.com/HRK9mpHMA6
— Rahul Haridas (@rahultron24) January 31, 2020