'பாவம் இல்ல...! அவங்களுக்கும் 'ஒண்ணு' கொடுங்க...' அவங்களும் நம்ம 'புள்ளிங்கோ' தானே...! மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக நாய்களுக்கு முகமூடி வாங்குவதில் சீனர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை அங்கு இந்நோய்க்கு 170-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி உள்ள சூழ்நிலையில், இது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது..
இந்தச் சூழ்நிலையில் நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக அறியப்படும் சீனாவில், இந்த நோயின் பாதிப்பு தங்கள் செல்லப்பிராணிகளான நாய்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக சீனர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதீத ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர். அங்கு, செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக மருத்துவமனைகளில் தற்போது கூட்டம் குவியத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு நாய்களுக்கான முகமூடிகளும் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகம் விற்பனையாக தொடங்கியிருப்பதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனமான WHO இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் மீது கண்டறியப்படவில்லை, ஆகவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.