‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையிலும், பிரித்வி ஷா அரை சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’!

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், காயம் காரணமாக விலகியுள்ள இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் பிரித்வி ஷா பவுண்டரிகள் மற்றும் சிக்சர் அடித்து அரை சதம் கடந்தார். அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த நிலையில், 54 ரன்களில் ஜேமின்சன் பந்து வீச்சில் பிரித்வி ஷா அவுட்டானார்.  உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப்பின் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற தொடங்கியது இந்திய அணி.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிம் சௌத்தி பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார் . அடுத்து களத்திற்கு வந்த ராஹனே 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, இந்திய அணி தற்போது வரை 122 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கருக்குப்  பிறகு இளம் வயதில், அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றார்.

Youngest Indian batsmen to hit Test fifty in New Zealand

Sachin Tendulkar in 1990 - 16 years and 291 days

Prithvi Shaw in 2020 - 20 years and 112 days

Atul Wasan in 1990 - 21 years and 336 days

Brijesh Patel in 1976 - 23 years 81 days

Sandeep Patil in 1981 - 24 years and 187 days

CRICKET, TWITTER, VIRATKOHLI, RAVICHANDRAN ASHWIN, RAVINDRA JADEJA, PRITHVI SHAW, WICKET, OUT, IND VS NZ