‘டி20 மேட்ச்சா இல்ல உலகக்கோப்பையானே தெரியல’.. பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக பந்து வீசி பாகிஸ்தானை 105 ரன்களுக்கு சுருட்டியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் 2 -வது போட்டி இன்று(31.05.2019) ட்ரெண்ட் ப்ரிஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களி வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், பாபர் அசாம் மற்றும் ஃபாகர் ஜமான் 22 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒசானே தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ரசல் 2 விக்கெட்டுகளும், ஷெல்டன் காட்ரெல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.
Earlier this morning, West Indies started their day with a Sheldon Cottrell salute! 🙌
The paceman took the first wicket of #CWC19 for the #MenInMaroonhttps://t.co/5SJXfYj8km
— Cricket World Cup (@cricketworldcup) May 31, 2019