'உலகக் கோப்பையில் இதுல பாகிஸ்தான் முதலிடம்'... 'கடைசி இடத்தில் இந்திய அணி'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது வரை 30 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதிக கேட்ச் விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 45 போட்டிகளில் இதுவரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியின் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 5 போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணி 4 வெற்றியுடன், 3-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு அரையிறுத்திக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 4-வதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று வரை நடந்து முடிந்த 30 போட்டிகளிலும் மோசமான பீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச்களை கோட்டை விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் பாகிஸ்தான் அணி மொத்தம் கிடைத்த 26 கேட்ச்களில், 14 கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. இது 35 சதவிகிதமாகும். இங்கிலாந்து அணி மொத்தம் கிடைத்த 42 கேட்ச்களில் 10-ஐ கோட்டை விட்டுள்ளது. இந்திய அணி 15 கேட்ச்களில் 1-ஐ மட்டுமே தவறவிட்டுள்ளது. இதனால், பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.
Pakistan have now dropped 14 catches in this World Cup - the most of any team in the tournament. India have dropped just one catch. #CWC19 pic.twitter.com/VA5zbux7uc
— The CricViz Analyst (@cricvizanalyst) June 23, 2019