'செல்லுமா? செல்லாதா?' .. 'வாங்கலாமா வாங்கக் கூடாதா?'.. சர்ச்சையில் சிக்கிய சர்க்குலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாணயங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்துக்கும் அதன் மதிப்பை இழந்துவிடுவது வாடிக்கை. 5 பைசாவில் தொடங்கி, 10 பைசா, 25 பைசா, 50 பைசா வரை இப்போது நாணயங்களுக்கான மதிப்புகள் இல்லாமலே போய்விட்டன. 1 ரூபாயில் இருந்துதான் தற்போது பணமதிப்பு என்பது கணக்கிடப்படுகிறது.

'செல்லுமா? செல்லாதா?' .. 'வாங்கலாமா வாங்கக் கூடாதா?'.. சர்ச்சையில் சிக்கிய சர்க்குலர்!

சில நாட்களுக்கு முன்னர் வரை 5 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாகின. இன்றும் அதனை சில இடங்களில் வாங்கிக் கொள்கின்றனர். சில இடங்களில் செல்லாது என மக்களும் நடத்துநர்களும் புறக்கணிக்கின்றனர். தற்போது இதே போல், 10 ரூபாய் நாணய விவாகரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த பிரச்சனையும் சில வருடங்களுக்கு முன்பே தொடங்கியதுதான். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கிராமப்புறங்களில் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், தலைப்புச் செய்தியாகவே இந்த நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றுவரை அதை வாங்குவதற்கு பலரும் யோசிப்பதுண்டு. குறிப்பாக நடத்துநர்கள் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை, 10 ரூபாய் நாணயங்களை மக்களிடம் இருந்து வாங்க மறுக்க வேண்டும் என்றும், மீறி வந்தால் அதை மக்களிடமே ரொட்டேட் பண்ணி கொடுத்துவிட அறிவுறுத்தியும் நடத்துநர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமல்லாமல், கலெக்‌ஷன் கொடுக்கும்போது 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியது. இந்த சர்குலேஷனை யாரோ புகைப்படம் எடுத்து பகிரவும், விஷயம் பரவி சர்ச்சை எழுந்ததை அடுத்து, இந்த சுற்றறிக்கை அந்த பணிமனை வாபஸ் பெற்றது.

இதுகுறித்து பேசிய  அந்த பணிமனை மேலாளர்,  வங்கியில் பணம் செலுத்தும்போது உண்டாகும் இடையூறுகளுக்காகவே அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாகவும், ஆனால் அது தவறான புரிதலைத் தந்ததால் திரும்ப பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

TIRUPPUR