“ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”!... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 -யின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

“ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”!... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டில் அணிகள் பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் ஐசிசி டி20-யின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கடும் பின்னடைவை சந்திதுள்ளது. மேலும் பல்வேறு மாற்றங்களுடன் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த டி20 போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற பாகிஸ்தான் (286 புள்ளிகளுடன்) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து 2 ஆம் இடத்தில் (262 புள்ளிகளுடன்) தென் ஆப்ரிக்காவும், 3 வது மற்றும் 4 வது இடத்தில் (261 புள்ளிகளுடன்) ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் உள்ளது.

இந்நிலையில், 2 வது இடத்தில் இருந்த இந்தியா (260 புள்ளிகளுடன்) 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 5 வது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா அணி 262 புள்ளிகள் பெற்று 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து, 8 வது இடத்தில் இருந்த இலங்கை அணி 7 வது இடத்துக்கும், 9 வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி 8 வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 வது இடத்தில் உள்ளது.

மேலும் இந்த பட்டியலில் மிகப்பெரிய மாற்றமாக 14 வது இடத்தில் இருந்த நேபாளம் 11 வது இடத்துக்கும், நமிபியா 20 வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்த புதிய தரவரிசை பட்டியலினால் இந்தியாவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ICC, T20 RANKING, INDIA