"என்னது தோனி பேவரைட் இல்லையா?"... "அப்போ யார சொல்லிருப்பாரு"... 'காம்பீர்' சொன்ன 'பெஸ்ட்' கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2003 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த கவுதம் காம்பீர், முதன் முறையாக கங்குலி தலைமையில் ஆடினார். அதன் பின்னர் ராகுல் டிராவிட், கும்ப்ளே, தோனி ஆகியோர் தலைமையில் ஆடியுள்ளார். தோனி தலைமையில் டி 20 மற்றும் ஐம்பது ஓவர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. அந்த தொடர்களின் இறுதி போட்டியில் காம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நீங்கள் விளையாடிய காலத்தில் சிறந்த கேப்டன் யாரென்றே கேள்வி காம்பீரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்பீர், 'சாதனைகள் அடிப்படையில் தோனி முன்னிலையில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிந்த வரை கும்ப்ளே தான் சிறந்த கேப்டன். கும்ப்ளே நீண்ட காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என என் மனதார விரும்பினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவரால் நீண்ட நாட்கள் கேப்டனாக இருக்க முடியவில்லை. அப்படி இருந்திருந்தால் பல்வேறு சாதனைகளை அவர் முறியடித்திருப்பார்' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கவுதம் காம்பீர் தனது பேட்டி ஒன்றில் வரவிருக்கும் டி 20 உலக கோப்பை போட்டி தொடரில் பங்கேற்பது கடினம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.