பயிற்சியின் போதே 'வெறித்தனம்'!... "மண்டைக்குத்தான் 'குறி' வைக்கிறார்!..." பும்ராவைக் கண்டு மிரளும் 'கோலி'!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயிற்சியின் போது கூட பேட்ஸ்மேன்களை பதம் பார்க்க இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கொஞ்சம் கூட தயங்கியதில்லை என கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒரு நாள் போட்டி நாளை துவங்குகிறது. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பயிற்சியின்போது, இந்திய பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் விலா எலும்புகளை சேதப்படுத்தவும் தயங்க மாட்டார் என கோலி தெரிவித்துள்ளார்.
வலைப்பயிற்சியில் பும்ராவை எதிர் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விராட் கோலி “என்னைப் பொறுத்தவரையில் பும்ரா மிகச்சிறந்த பவுலர், தற்போதுள்ள பவுலர்களில் உலகளவில் சிறந்த பவுலர் பும்ரா தான் எனக் கூறினார். பயிற்சியில் கூட போட்டியில் செயல்படும் அதே திறனோடு செயல்படுவார் என்றும், அவ்வப்போது விலா எலும்புகளையும், பேட்ஸ்மேனின் தலையையும் குறிவைத்து பவுலிங் செய்ய பும்ரா கொஞ்சம் கூட தயங்க என்றும் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் வலைப்பயிற்சியின் போது பும்ரா வீசிய பந்தில் இரண்டாவது முறையாக அவுட்டாகியுள்ளேன் என்றும் கோலி தெரிவித்தார்.