VIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’!.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை ஏலத்தில் எடுத்தது குறித்து சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் சென்னை அணி இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்னனை எடுத்தது. அடுத்ததாக கோல்டர் நைல்-யை எடுக்க மும்பை அணியுடன் போட்டிபோட்டது. ஆனால் 8 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தட்டி சென்றது.
இந்த நிலையில் ஏலத்திற்கு வந்த சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை சென்னை அணி 6.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. குறைவான தொகையுடன் ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை அணி பியூஸ் சாவ்லாவிற்காக 6.75 கோடி ரூபாயை வீணாக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், ‘எங்க தலைவனுக்கு (தோனி) என்ன வேணும்னு தெரியும். லெக் ஸ்பின்னர் டீம்ல இருந்தா நல்லதுதான்’ என பேசினார். மேலும் பேசிய அவர், வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைல்-ஐ ஏலத்தில் தவறவிட்டது சற்று வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
Thalaivan Irukkindraan! 🦁💛 #SuperFam #SuperAuction #WhistlePodu https://t.co/dDX5lGHog3
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2019