‘மருத்துவக் குழு சொன்னதுனால கொறைச்சுக்கிறேன்’.. கொரோனாவால் அச்சுறுத்தலால் ‘இந்த’ பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இனி கிரிக்கெட் பந்தில் எச்சில் தொட்டு தேய்க்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவின் அச்சுறுத்தல் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை தடுக்கும் முக்கிய நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் அனைத்து துறைகளும் எடுத்து வருகின்றன. இதன் விளைவாக அதிக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதான நிகழ்வுகளான விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்குமாறும் வெளியாட்களிடம் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மருத்துவ குழுவினருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆலோசனை மேற்கொண்டதாகவும், இதனையடுத்து மைதானத்தில் பந்தில் எச்சில் தொட்டு தேய்ப்பதை குறைத்துக்கொள்ள உள்ளதாக இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ குழுவினர் தங்களுடன் இருப்பதாகவும், அவர்களின் ஆலோசனைப்படி செயல்படுவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.