'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-வங்கதேசம் மோதிய டெஸ்ட் போட்டியில் வீரர்கள் அறையில் நடந்த எல்லைமீறல் சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!

இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 0-2 என கைப்பற்றியது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல சூதாட்ட களத்திலும் இப்போட்டி மிகுந்த சூடுபிடித்து இருந்தது.

இந்தநிலையில் வங்கதேச வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு அந்த அணியின் மேலாளராக செயல்பட்ட தப்பான் சக்கி அடிக்கடி சென்று வந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் வீரர்கள் உடைமாற்றும் அறையில் அவர் மொபைல் போனில் அடிக்கடி பேசியதாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்ட பிசிசிஐ அதிகாரிகள் சக்கியை எச்சரித்துள்ளனர்.

ஐசிசியின் கட்டுப்பாடுகளின்படி வீரர்கள் உடை மாற்றும் அறையில் எந்த வகையான நவீன மின்தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தக் கூடாது. எச்சரிக்கைக்கு பின்னரும் சக்கி மொபைல் போனில் பேசியிருக்கிறார். இதைக்கண்ட பிசிசிஐ அதிகாரிகள் தற்போது பிசிசிஐ ஊழல் தடுப்பு குழுவினரிடம் புகார் அளித்துள்ளனர்.

விரைவில் சக்கியை பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி விசாரணை செய்வார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், சக்கி போட்டியின்போது மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.