தலைக்கேறிய போதை.. 'மகளது' மஞ்சள் நீராட்டு விழாவில்..தந்தையை 'அடித்துக்கொன்ற' தாய்மாமன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகளது மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைக்கேறிய போதை.. 'மகளது' மஞ்சள் நீராட்டு விழாவில்..தந்தையை 'அடித்துக்கொன்ற' தாய்மாமன்!

வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ்(45) என்பவரது மகளுக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தாய்மாமன் சீர் செய்வதற்காக மோகன்ராஜின் மனைவி ரோஸியின் அண்ணன் ஜோசப் வந்திருந்தார். மதியம் விருந்து முடிந்ததும் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது போதையில் இருந்த மோகன்ராஜ், ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஜோசப் அருகில் இருந்த விறகுக்கட்டையை எடுத்து மோகன்ராஜை தாக்கி இருக்கிறார். இதில் மயங்கி விழுந்த மோகன்ராஜை அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து ரோஸி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஜோசப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.