Video: ‘ஜாம்பவானின் உலக சாதனையை’... ‘சமன் செய்த அஸ்வின்’... ‘அதிவேகத்தில் இவ்ளோ விக்கெட்டுகளா???’... வாழ்த்து சொன்ன பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின், குவித்த விக்கெட்டுகள் மூலம் ஜாம்பவான்vமுத்தையா முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்தார்.

Video: ‘ஜாம்பவானின் உலக சாதனையை’... ‘சமன் செய்த அஸ்வின்’... ‘அதிவேகத்தில் இவ்ளோ விக்கெட்டுகளா???’... வாழ்த்து சொன்ன பிசிசிஐ!

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் கடந்த 5 நாட்களாக நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்தப் போட்டியில், இந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். முதல் டெஸ்டின் கடைசி நாளான, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்ற போட்டியில், டி விரையுன் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் தொடரில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர், முரளிதரனின் சாதனையை, அஸ்வின் சமன் செய்தார். இருவருமே, 66 டெஸ்ட் போட்டிகளில், 350 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை செய்து ஒற்றுமை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://blob:http://www.bcci.tv/1d68ed1e-a6c6-4fb5-881a-5ff6d303e4be