‘தாயின் கண்முன்னே'... 'உணவு ஊட்டியபோது'... 'குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்'... ‘பதறித்துடித்த இளம் தம்பதி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில், பால்கனியில் நின்றுகொண்டு உணவு ஊட்டியபோது, தாயின் கையில் இருந்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டித்தோப்பு சரவணமுதலி தெருவைச் சேர்ந்தவர்கள் அருண் (35) - ஜெயஸ்ரீ (30) தம்பதியினர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 3-வது மாடியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் பூமி என்ற குழந்தையும் இருந்தது. இந்நிலையில், தாய் ஜெயஸ்ரீ தனது ஒன்றரை வயது குழந்தைக்கு, கடந்த சனிக்கிழமை அன்று இரவு, பால்கனியில் நின்றுக்கொண்டு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தை சாப்பிட அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
சமாதானம் செய்து குழந்தை சாப்பிட வைத்தபோது, திடீரென திமிறிய அந்த குழந்தை, தாயின் கையில் இருந்து தவறி விழுந்தது. இதனைக் கண்டு பதறிய தாய் ஜெயஸ்ரீ செய்வதறியாது திகைத்தார். பின்னர் கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், 3-வது மாடியிலிருந்து விழுந்து, தலையில் பலத்த காயமடைந்ததால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனால் பெற்றோர் கதறித்துடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.