'தடை .. அதை உடைத்து.. புது சரித்தம் படைக்கலாம்.. இப்படி நண்பர்கள் இருந்தால்' .. இன்ஸ்பைரிங் வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்தன்னம்பிக்கையின் முதல் கரம் நீட்டுபவர்கள் நண்பர்களாக இருந்தால், எத்தனை சிறப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில், வெளியாகியுள்ள வீடியோ ஒன்று காண்போர்களை உருவக வைத்துள்ளது.
அந்த வீடியோவில், கராத்தே மாஸ்டர் ஒருவர் தனது மாஸ்டரின் கையில் இருக்கும் மரப்பலகையினை பயிற்சியின்போது காலால் உடைக்க முற்பட்டு முடியாமல் கீழே வீழ்கிறான். ஆனால் அவனது வீழ்ச்சியினை அங்கிருந்த நண்பர்கள் யாரும் பரிகசிக்காமல் இயல்பாக ஏற்றுக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருக்கின்றனர்.
பிறகு அங்குள்ள இன்னொரு நண்பன் எழுந்து, விழுந்த சிறுவனுக்கு கைகொடுத்து, மீண்டும் மாஸ்டரின் கைகளில் உள்ள பலகையை உடைப்பதற்கான மன வலிமையை உடனிருந்து தருகிறான். ஆனாலும் அப்போதும் முயல்கிற சிறுவனால் அந்த பலகையை உடைக்க முடியாமல் போகிறது.
அப்போது தன்னால் அந்த மரப்பலகையை, காலால் உதைக்க முற்படாமல், கால்முட்டியால் உதைத்து உடைக்கச் சொல்லி, கராத்தே மாஸ்டர் அறிவுறுத்துகிறார். இதனை முன்பை விட சற்று எளிமையாக முயற்சி செய்யலாம் என்பதால், கூடியிருக்கும் நண்பர்கள், உற்சாகப்படுத்த, அப்போது சிறுவன் இரண்டு துண்டுகளாக உதைத்து, உடைத்துவிடுகிறான்.
இதனையடுத்து மாஸ்டரும் நண்பர்களும் அந்தச் சிறுவனை கொண்டாடத் தொடங்குகின்றனர். தன்னம்பிக்கை என்பது தம்மில் உருவாவது என்றாலும், அதற்கு பிறரது ஊக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு அவர்கள் தரும் மனோத்திடமும் முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
mane i be crying over everything RT @YeolSoo12: I'm so amazed that NO ONE of his friends laughed. Gosh, This is the type of support everyone needs 😭💕👌!!pic.twitter.com/r9nutB1lZM
— que hailey (@Oprahsidepiece) May 14, 2019