'ஒரு செகண்ட் கண்ணுல படலன்னாலும் அழுது தீர்க்கும் குழந்தை!' .. ஹிட் அடித்த தாயின் வைரல் ஐடியா!
முகப்பு > செய்திகள் > கதைகள்அழுகிற குழந்தைகளை சமாதானப்படுத்துவது எல்லாருக்கும் எளிமையானதல்ல. அதைச் செய்ய பெரும்பாலும் உகந்தவர் குழந்தையின் தாய்தான்.
தாயின் அரவணைப்பையெல்லாம் தாண்டி, தாயின் இருப்பு கண் முன்னே இருந்தால் கூட குழந்தை தன் பாட்டுக்கும் சிரித்துக்கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும். சில விநாடிகள் அம்மா, கண் பார்க்கும் தூரத்தில் இருந்து அகன்றுவிட்டால், தவழும் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிடுகிறது.
இப்படித்தான் தவழும் பருவத்துக்கும் நடைவண்டி பருவத்துக்கும் இடையில் இருக்கும் ஜப்பானிய குழந்தை ஒன்று, தாயை காணவில்லை என்றால் அழத் தொடங்கிவிடுகிறது. இதனை சமாளிக்க ஜப்பானில் தாய் ஒருவர், தனது ஆளுயர கட்-அவுட்டினை வீட்டில் ஆங்காங்கே நிறுத்தி, குழந்தையின் தாயின் முகத்தை குழந்தை பார்த்துக்கொண்டே இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளனர்.
うちの1歳児、お母さんが視界から消えるとすぐ泣いちゃうので、大変。
その対策として「等身大パネルの母」を設置するとどうなるか実験してみた。
(つづく) pic.twitter.com/VOgy1619G0
— 佐藤ねじ🌲ブルーパドル (@sato_nezi) December 8, 2019
இதனால் குழந்தை உளவியல் ரீதியாக தாய் இருப்பதாக நினைத்துக்கொண்டு அழாமல் விளையாடுகிறது. இந்த யோசனையை பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டியும் பின்பற்றியும் வருகின்றனர்.