'என்ன காப்பாத்த யாருமே இல்லயா?'.. 'பயப்படாத.. நான் வரேன்'.. நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > கதைகள்தெற்கு சீனாவில் நாய்களுக்கு இடையே நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிருகத்திடம் மனிதநேயம் இருக்கிறது; மனிதர்களிடன் மிருக நேயம் கூட இல்லை என்று ஒரு வாசகம் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு நாய் நடந்துகொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீனாவின் குயிங்வாங் சிட்டி அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் ஒரு நாய் ஒன்று நடந்துவந்த போது, அங்கு ஒரு ஆற்றின் நடுவே ஒரு படகில் தன்னந்தனியே நின்றுகொண்டு தவித்துக் கொண்டிருந்த தனது தோழமை, குட்டிநாய்க் குட்டியை பார்த்துள்ளது. கடையில் இருந்து எவ்வளவோ குரைத்தும் அந்த குட்டி நாய் இறங்கிவரவில்லை.
காரணம், அந்த நாய்க்குட்டி அவ்வளவும் பயந்துபோய் இருந்துள்ளது. இதனால் பெரிய நாய், துணிச்சலாக, தண்ணீரில் இறங்கி நீச்சல் அடித்தபடி சென்று, படகின் முனையில் இருந்த கயிற்றைப் பிடித்துக்கொடு இழுத்துக்கொண்டுவந்து கரையருகே நிறுத்துகிறது. குட்டிநாய்க்குட்டியோ இறங்கி மகிழ்ச்சியாக கரையேறுகிறது.
சமயோஜிதமாக செயல்பட்ட நாயின் இந்த செயல், கேமராவில் பதிவாகி முக்கிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.