‘பறக்க ஆரம்பிச்ச 5 செகண்ட்ல நடந்த விபரீதம்’.. ‘அடுத்த நொடி பைலட் எடுத்த மாஸ்டர் ப்ளான்..! நடுங்க வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பறவை மோதியதால் நிலைதடுமாறிய விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை காப்பாற்றிய விமானியை ரஷ்ய அரசு பாராட்டியுள்ளது.

‘பறக்க ஆரம்பிச்ச 5 செகண்ட்ல நடந்த விபரீதம்’.. ‘அடுத்த நொடி பைலட் எடுத்த மாஸ்டர் ப்ளான்..! நடுங்க வைத்த சம்பவம்..!

யுரால் ஏர்பஸ் 312 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து கிரீமியாவிற்கு 233 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. அப்போது விமானம் வானில் பறக்க ஆரம்பித்த 5 விநாடிகளில் பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் எஞ்சின் பகுதியில் மோதியுள்ளது. இதனால் விமானத்தின் கீழ் பகுதியில் லேசாக தீ எரிய தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து விமானத்தை சாதூர்யமாக அருகில் இருந்த சோளக்காட்டில் விமானி தரையிறக்கியுள்ளார். கனநேரத்தில் விமானி எடுத்த இந்த முடிவால் விமானத்தில் பயணம் செய்த 233 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பறவை மோதிய சில நிமிடங்களில் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு ரஷ்ய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

PLANE, CRASH, CORNFIELD, PASSENGER, BIRDS, RUSSIA