'இருட்டா தெரியுது'.. ஒரு நொடியில் நிகழ்ந்த மேஜிக்.. நெகிழ்ந்து போய் சிறுவன் செய்த காரியம்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்நேபாளத்தில் உள்ள சமூகக் கண் மருத்துவமனையான ஹெடௌடா மருத்துவமனை, அப்பகுதியில் பார்வையிழந்தோருக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பங்கேற்ற 13 வயது சிறுவன் ரோஷன், கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கண்ணில் ஏற்பட்ட புரை காரணமாக திடீரென பார்வை இழந்துள்ளான். திடீரென பார்வை இழந்ததால், பள்ளி செல்வது உள்ளிட்ட ரோஷனின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. வெவ்வேறு சிகிச்சைகளை முயற்சித்தும் பலனில்லாத ரோஷன் ஏழ்மையான குடும்பத்துச் சிறுவன். அவனுக்கு இனியும் பார்வை கிடைப்பது சிரமம்தான் என பலரும் கைவிரித்துவிட்டனர்.
இந்த நிலையில்தான், சற்றே அவநம்பிக்கையுடன் மருத்துவர் சந்துக் ரூயிட் தலைமையில் நடந்த இந்த கண் பார்வையற்றோர் சிகிச்சை முகாமுக்கு ரோஷன் சென்றுள்ளான். அங்கு ரோஷனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பின், கண் கட்டவிழ்த்த சிறுவன் தனக்கு எல்லாமே இருட்டாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளான்.
இதைக் கேட்டு அனைவருமே அதிர்ந்தாலும், சந்துக் ரூயிட், நிதானமாக, ரோஷனுக்கு சில வழிமுறைகளை அந்த இடத்திலேயே அனைவரின் முன்னிலையில் கூறுகிறார். அதை முயற்சித்த ரோஷன், ‘இப்போது எனக்கு வெளிச்சம் தெரியத் தொடங்குகிறது’ என்கிறான். அதன் பின் அவன் பார்வையை பரிசோதிக்க பல்வேறு சோதனைகளை சந்துக் ரூயிட் அவனுக்கு செய்து காட்டுகிறார். சிறுவன் அனைத்தையும் சரியாகச் சொல்கிறான்.
அப்போதுதான் அனைவருக்குமே நெகிழ்ச்சி உண்டானது. ரோஷனோ, நன்றி தெரிவிக்க தெரியாமல், மருத்துவர் சந்துக் ரூயிட்டை அருகில் சென்று ஆதூரமாய் அணைத்தபடி உருகி நெகிழ்கிறான். இந்தத் தகவல்களோடு சேர்த்து இந்த வீடியோவையும் அங்கிருந்த புகைப்படக் காரர் பதிவிட்ட அடுத்த நிமிடம் இந்த வீடியோ பலரையும் பாராட வைத்துள்ளது.
Roshan Thing, 13, can't hold himself back after being able to see the world again.
He pours all his love on Dr Sanduk Ruit, who used his magic to give the boy eyesight. 😘
I was really praying for him, and I was really happy to capture this moment. pic.twitter.com/3fv2Q86EDu
— Om Astha Rai (@omastharai) July 3, 2019