‘பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை’.. சென்னையை அதிரவைத்த ஷேர் ஆட்டோ டிரைவர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை அடித்து வந்த ஆட்டோ ஓட்டுநரை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள வேலன் நகரில் வசிக்கும் விஜயா என்பவரது வீடு மற்றும் ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் ரீகன் என்பவரது வீட்டில் யாரும் இல்லாத சமயம் பூட்டு உடைக்கப்பட்டு 36 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பூட்டி இருக்கும் வீடுகளை அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்ததால் போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரவமாக தேட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்ததில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஷேர் ஆட்டோ ஒன்று செல்வதை போலிஸார் கவணித்துள்ளனர். அதில் ஆட்டோ ஓட்டுநர் ப்ளாஸ்டிக் பையில் எதையோ எடுத்து செல்வது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து ஷேர் ஆட்டோவின் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கார்த்திக்கை கைது செய்த போலிஸார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் ஷேர் ஆட்டோவின் மூலம் சென்று யாரும் இல்லாமல் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் விட்டுள்ளார். பின்னர் சவாரி செல்வது போல் சென்று அந்த வீடுகளில் திருடி வந்துள்ளர். இதனை யாரும் சந்தேகிக்காமல் இருக்க ஷேர் ஆட்டோவில் சென்றதாக போலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.