'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்திற்கு அழைத்து தனக்கு சமோசா வேண்டுமென கேட்டுள்ளார்.

'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் வேடிக்கையான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது மக்களுக்கு அவசர காலத்தில் உதவ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு அழைத்த இளைஞர் ஒருவர் தனக்கு நான்கு சமோசா வேண்டுமென கேட்டுள்ளார். இளைஞர் அடம்பிடித்ததால் கடுப்பான மாஜிஸ்ட்ரேட் அங்குள்ள அதிகரிகளைக் கொண்டு அந்த இளைஞருக்கு சமோசா வாங்கி கொடுக்க சொல்லியுள்ளார். அவசர எண்ணிற்கு தொல்லை கொடுத்ததற்கு தண்டனையாக தெரு மற்றும் சாக்கடையை சுத்தம் செய்யவும் அதிகாரியோர்கள் அந்த இளைஞரிடம் கூறியுள்ளனர்.

சமோசாவை சாப்பிட இளைஞர் பின்னர் தெரு மற்றும் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

UTTAR PRADESH, LOCKDOWN