'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்ல வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விரிவான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்!

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''பொழிச்சலூர் பகுதியில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளது என கூறினார். மேலும் அந்த பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தினசரி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்ல வேண்டாம். அங்குள்ள மக்கள் தனி குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வெளியாட்கள் யாராவது வந்து விட்டு சென்றால் அவர்களை யாரும் கண்காணிக்க முடியாது. வெளியாட்கள் யாரும் பொழிச்சலூர் பகுதிக்கு செல்ல வேண்டாம். பொழிச்சலூர் பகுதியை தொடர்ந்து கண்காணித்து யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி கடந்த வாரம் தேவாலயம் சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 40 பேரும்  தனிமைப்படுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் மூதாட்டியுடன் இருந்தவர்கள் தங்களை சுய தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்'' என கலெக்டர் கூறியுள்ளார்.

CORONA, CORONAVIRUS, CHENNAI, PALLAVARAM, பொழிச்சலூர், POZHICHALUR