'இத ஒரு டஸன் டைம் சொல்லிருப்பாங்க.. அட ட்விட்டர்ல சொன்னா கூட ஓகே தாங்க'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் பேரால், வாக்குவாங்கி அரசியலை நடத்துவதாக, அவர் மீது குற்றம் சாட்டிய அல்கா லம்பா, அந்த கட்சியுடன் ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காரணமாகவும், தான் பல நேரங்களில் கட்சி நிகழ்வுகளில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து, விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைப் பேச்சாளர், சவுரப் பரத்வாஜ், ‘இதற்கு முன்னதாகவே அல்கா இதை ஒரு டஸன் முறை கூறியிருப்பார். ஆனால் அவர் ராஜினாமா செய்வதற்கு ஒரு நிமிஷம் போதும். எனினும் ட்விட்டரில் அவர் அதை தெரிவித்தால் கூட, நாங்கள் உடனடியாக அவரின் ராஜினாமா வேண்டுகோளை ஏற்று அவருக்கு வேண்டியவற்றை ஆவன செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏவான அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மட்டுமே விலகுவதாகவும், அதே சமயம் அரசியலில் இருந்து விலகவில்லை என்றும், சுயேட்சை எம்.எல்.ஏவாக மக்களுக்குத் தொடர்ந்து தனது சேவைப் பணிகளை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.