‘என் பையனுக்கு இப்டியா நடக்கணும்?’... ‘தட்டிக்கேட்ட முதல்வரின் பாதுகாவலர்’... 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரவு நேர கேளிக்கை விடுதியில், பெண்ணின் மீது உரசியவனைத் தட்டிக்கேட்ட, இளைஞரும், பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாவலருமான இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘என் பையனுக்கு இப்டியா நடக்கணும்?’... ‘தட்டிக்கேட்ட முதல்வரின் பாதுகாவலர்’... 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்'!

பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாவலராக உள்ளவர், 25 வயதான சுக்விந்தர் சிங். இவர் மொஹாலியில் கடந்த சனிக்கிழமை இரவு, தனது தோழி மற்றும் நண்பர்களுடன் இரவு நேர கேளிக்கை விடுதியில். டிஸ்கோதேவிற்கு சென்றார். அப்போது, அங்கே சஹில் சாகர் என்பவரும், தனது நண்பர்களுடன் வந்திருந்தார். நள்ளிரவு இரண்டரை மணியளவில், சஹில் சாகர், அங்கிருந்த பெண்கள் சிலர் மீது வேண்டுமென்றே மோதிக் கொண்டும், உரசிக் கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாவலரான சுக்விந்தர் சிங், சஹில் சாகரை தட்டிக்கேட்டார்.

அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதால், டிஸ்கோதே நிர்வாகம் பெண்களை உரசியதாக சஹில் சாகரை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த சஹில் சாகர், கேளிக்கை விடுதியின் பார்க்கிங் பகுதியில் காத்திருந்தார். இந்நிலையில், அதிகாலை மூன்றரை மணியளவில் டிஸ்கோதேவிலிருந்து வெளியேறினார் பாதுகாவலர் சுக்விந்தர் சிங். இதனை எதிர்பார்த்து காத்திருந்த சஹில் சாகர், தன் காரிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துவந்து, 3 முறை சுக்விந்தரை நோக்கி சுட்டார்.

அதில் ஒன்று பாதுகாவலர் சுக்விந்தரின் மார்பிலும், மற்றொன்று வயிற்றிலும் பட்டது. இதில் படுகாயமடைந்த பாதுகாவலர் சுக்விந்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டுவரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளைஞரும், பாதுகாவலருமான சுக்விந்தர் சிங்கின் உடலைப் பார்த்து, தனது மகனுக்கு நடந்தை நினைத்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

சுக்விந்தர் சிங்கின் தந்தையும், உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். சுக்விந்தர் சிங் இறந்ததை தன்னால் நம்பமுடியவில்லை என்று, அவரது நண்பர் திராத் சிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், பார்க்கிங் பகுதி சிசிடிவியைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய சஹில் சாகர் மற்றும் இதற்கு உதவியாக இருந்த, அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

MURDER, PUNJAB, YOUTH