‘திடீரென இடிந்து விழுந்த பாலம்’.. ‘நொடியில் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பல கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.
குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகே உள்ள மலனாகா கிராமத்தில் எப்போதுமே வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் பாலம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார்கள் தடுமாறி விழுந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் கார்களில் இருந்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் பல கார்கள் சேதமடைந்துள்ள நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடும் மழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனால் ஜுனாகத்தில் இருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
As received as forward the bridge collapsed in Gujarat at village Malanaka, Taluka Mendarda Junagadh @nitin_gadkari @PMOIndia Sir people don't want this type of quality work, please look in this regard. People of India have much expectations from your government. pic.twitter.com/rKvBzd8yxw
— yogesh joshi (@YlJoshi) October 6, 2019