தன்னை விட 'வயது' குறைந்த எம்.எல்.ஏவை 'மணக்கும்' அதிதி.. யாருன்னு தெரியுதா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அதிதி சிங் (32). சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிதி சிங் எம்.எல்.ஏ ஆனார். இதனால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் ஆனார்.

தன்னை விட 'வயது' குறைந்த எம்.எல்.ஏவை 'மணக்கும்' அதிதி.. யாருன்னு தெரியுதா?

தொடர்ந்து ராகுல்காந்தி அருகே மேடையில் அமர்ந்து இருந்த அதிதியின் புகைப்படங்கள் வைரலானது. மேலும் ராகுலை, அதிதி மணக்க இருக்கதாகவும் கூறப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அதிதி பிரபலம் ஆனார். எனினும் அந்த செய்திகள் வதந்தி என்று கூறி அதற்கு அதிதி முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிதி சிங் ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் காங்கிரஸ் தலைமை அதிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.இப்படி பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அதிதி சிங் மிகவும் பிரபலமான எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

இந்தநிலையில் அதிதி சிங் பஞ்சாப் எம்.எல்.ஏ அங்கத் சிங் சைனிக்கை(29) வரும் நவம்பர் 21-ம் தேதி கரம் பிடிக்கிறார். இருவருக்கும் இடையே 3 வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி இந்து அங்கத் சீக்கியர் என்பதால் இரு முறைகள் படியும் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி அதிதி-அங்கத் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.