Video 'சொந்த' தம்பியால் 'ரத்தம்' சொட்டச்சொட்ட.. மைதானத்தை விட்டு 'வெளியேறிய' வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னுடைய சொந்த தம்பியால் பிரபல கிரிக்கெட் வீரர் ரத்தம் சொட்டச்சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான மார்ஷ் ஒன்டே கப் தொடரில், வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா - சதர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் அண்ணன் ஆஸ்டன் ஆகர் வெஸ்டெர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும், தம்பி வெஸ் ஆகர் சதர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும் விளையாடினர். முதலில் பேட் செய்த வெஸ்டெர்ன் அணி 50 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய சதர்ன் அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் பெர்குசன் 72 ரன்களுடனும் , வெஸ் ஆகர் 4 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 41-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தினை வெஸ் ஆகர் எதிர்கொண்டார். அந்த பந்து கேட்சுக்கு சென்றது.
GRAPHIC CONTENT: Not for the faint-hearted, here is the footage of Agar's knock. Ouch! #MarshCup pic.twitter.com/h6Jj3drPsO
— cricket.com.au (@cricketcomau) November 17, 2019
இதைப்பார்த்த அண்ணன் ஆஸ்டன் ஆகர் அந்த பந்தினை பிடிக்க ஓடிவந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து அவரது கண்ணாடியில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அவரது நெற்றிப்பொட்டில் இருந்து ரத்தம் கீழே வழிந்தது. மேலும் அவர் அப்படியே களத்தில் படுத்து விட்டார். இதைக்கண்ட சக வீரர்கள் ஓடிவந்தனர். தம்பி வெஸ் ஆகரும் பேட்டை எறிந்துவிட்டு ஓடிவந்தார்.
தொடர்ந்து மருத்துவ குழு அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு தையல் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.