'மோதலில் ஈடுபட்டதாக திருநங்கைகள் மீது கொடூரத் தாக்குதல்'... அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருநங்கைகளை, காவல்துறையினர் லத்தியால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

'மோதலில் ஈடுபட்டதாக திருநங்கைகள் மீது கொடூரத் தாக்குதல்'... அதிர்ச்சி வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே லால் குர்தி காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருநங்கைகளின் 2 குழுக்களிடையே மீரட்டின் ஒரு பகுதியில் மோதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், திருநங்கைகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காவல் நிலையத்திலும் திருநங்கைகள் இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகத் தெரிகிறது.  இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 'திருநங்கைகளின் இருகுழுக்களினிடையே ஏற்பட்ட மோதலை தடுப்பதற்காகவே காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

அதற்கு அவர்கள் உடன்படாததால் தடியடி நடத்தப்பட்டதாக கூறினார். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்' என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

ATTACK, LATHICHARGE