‘17 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்..’ ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசாவில் காதலை ஏற்க மறுத்த 17 வயது பெண்ணின் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் நடந்துள்ளது.

‘17 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்..’ ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..

கடந்த 31ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த கோபிநாத் காரா என்ற இளைஞர் அவர்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் மீது தீ பற்றியதை உறுதி செய்துவிட்டு அவர் தப்பித்து ஓடியுள்ளார். அந்தப் பெண்ணிற்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக காயத்தின் அளவு இருந்ததால் எம்.கே.சி.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கட்டாக்கிலுள்ள ஒடிசாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மேல்பகுதி உடலும், முக்கிய உறுப்புகளும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தலைமறைவாக இருந்த இளைஞர் போலீஸில் சரணடைந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் தெற்கு கோராபுட் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரை கோபிநாத் காரா காதலிப்பதாக பலமுறை கூறியுள்ளார். அவருடைய காதலை அந்தப் பெண் ஏற்காததால் இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது.

ODISHA