‘இந்த ரயில்களில் எல்லாம்’... ‘அதிகரிக்கும் உணவு விலை’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிவேக ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் விலையை உயர்த்துவதாக, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
தொலைதூர பயணங்களை மேற்கொள்ள பொதுவாக மக்கள் தேர்ந்தெடுப்பது, ரயில் பயணங்களைதான். அதிலும், விரைவு ரயில்களை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பர். இந்நிலையில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய விரைவு ரயில்களில் உணவு வகைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும், உணவுப் பொருள்களின் விலையை உயா்த்துமாறும் ஐஆா்சிடிசி பரிந்துரைத்திருந்தது. இதன்படி, உணவு வகைகளிலும், உணவுப் பொருள்களின் விலைகளிலும் மாற்றம் கொண்டு வர ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிப்பவா்களுக்கு தேநீா் விலை-ரூ. 35, காலை உணவு- ரூ. 140, பிற்பகல் மற்றும் இரவு உணவின் விலை ரூ. 245-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 மற்றும் 3-ம் வகுப்பு ஏசி, சேர் கார் ஆகிய பெட்டிகளில் பயணிப்பவா்களுக்கு, தேநீா் ரூ. 20, காலை உணவு- ரூ.105, பிற்பகல் மற்றும் இரவு உணவின் விலை ரூ. 185-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த பகுதிகிளில் புகழ்பெற்று விளங்கும் சிற்றுண்டி அல்லது நொறுக்கு தீனிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய விலையேற்றம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பயணச்சீட்டு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.