'அப்படி என்ன சொன்னது இந்தியா?'.. 'இப்படி' ஒரு அதிரடி முடிவை எடுத்த டிக்டாக்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப்க்கு பிறகு இந்தியாவில் இருக்கும் பிரபலமான பொழுதுபோக்கு மற்றும் திறன்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் நிறைந்த சமூகவலைதளம் டிக்டாக்.
ஆனால் ஆரம்பத்தில் அவரவர் தனித்திறன்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக உதவிய டிக்டாக், அதன் பின்னர் வக்கிரமும் ஆபாசமும் நிறைந்த வீடியோக்களால் அலங்கரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. தவிர கலாச்சார சீர்கேடுகளை உண்டுபண்ணுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர்.
இதனை அடுத்து, இந்த செயலியை தடை செய்யக் கோரி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான, ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் பிரதரிடம் அளித்த புகாரின் பேரில், தனிநபர் தகவல்களுக்கான உத்தரவாதம், தேசவிரோத செயல்களை பதிவுசெய்தல், வதந்தி செய்திகளை பரப்புதல் உள்ளிட்டவை பற்றிய 24 கேள்விகளை இந்திய அரசு முன்வைத்தது.
இந்த கேள்விகளுக்கு முறையான பதிலும், விளக்கமும் இல்லையென்றால், இந்த செயலி தடைசெய்யப்படும் என்று இந்தியா எச்சரித்தது. இதனால் மேற்கண்டவாறான 60 லட்சம் வீடியோக்களை அதிரடியாக தனது தளத்தில் இருந்து டிக்டாக் நீக்கியுள்ளது. மேலும், பயனாளர்களின் திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணரவே இந்த ஆப் என்றும், எல்லைகளை மீறும் வீடியோக்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் டிக்டாக் செயலியின் இந்திய இயக்குனர் சச்சின் ஷர்மா கூறியுள்ளார்.