'அசாமில்' அடுத்தடுத்து 'குண்டுவெடிப்பு'... 'குடியரசு தின' பாதுகாப்புகளையும் மீறி நிகழ்ந்த 'சம்பவம்'... 'பதற்றத்தில்' பொதுமக்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாமில் தேசிய குருத்துவாரா, கிரகாம் பஜார் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அசாமில்' அடுத்தடுத்து 'குண்டுவெடிப்பு'... 'குடியரசு தின' பாதுகாப்புகளையும் மீறி நிகழ்ந்த 'சம்பவம்'... 'பதற்றத்தில்' பொதுமக்கள்...

நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், அசாமில் குருத்வாரா மற்றும் தேசிய நெடுஞ்சாலையருகே உள்ள கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 37 அருகே இன்று காலை திடீரென கடை ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதேபோல், அப்பகுதியில் உள்ள குருத்வாரா அருகிலும் குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 4 குண்டுவெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ASSAM, BOMB BLAST, REPUBLIC DAY, TERROR ATTACK