1. விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
2. தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம்வீரர் ஷூப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அதிமுக ஆயிரங்காலத்து பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
5. இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
6. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
7. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
8. ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
9. கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10. மகாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி. மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் வளர்ச்சிக்காக எங்களின் பணி தொடரும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.