'கண் முன்னே தீயில் கருகிய தாய்'.. '7 வயதில் இருந்து வன்கொடுமை'... தடைகளைத் தகர்த்த நடாஷாவின் சாதனை!
முகப்பு > செய்திகள் > கதைகள்செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பன்முகத் தன்மைகொண்ட பெண்களைக் கௌரவிக்கும் விதமாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிபிசியின் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்களுள் நடாஷா நோயல் இடம் பெற்றுள்ளார். ஏனெனில் குழந்தைப் பருவத்தில் அத்தனை துயரங்களை அனுபவித்து, பின் அதனையெல்லாம் வளர்ந்து, கடந்து யோகா, தன்னம்பிக்கைப் பேச்சு, நடனக் கலைஞர் என வளர்ந்தவர் நடாஷா.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘என் அம்மா என் கண் முன்னே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட காட்சி என் மனதை உருக்கியது. பாதித்தது. அவர் சாவுக்கு நான் காரணமில்லை. இருந்தும் நான் காப்ப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆதலால் என் மீது நான் குற்றவுணர்ச்சிப் பழியை சுமத்திக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.
அதன் பிறகுதான் வாழ்க்கையின் துயரம் துரத்தத் தொடங்கியது. 7 வயதிலேயே பாலியல் வன்கொடுமை, 15 வயதுவரை உறவினர்களால் உண்டான பாலியல் சீண்டல்கள், துயரங்கள் என மொத்த உலகத்தின் மீதுமுள்ள நம்பிக்கையை இழந்து நடைப்பிணமாகி, தன் மீதே வெறுப்பைக் கக்கி, யாரையும் நம்பாமல் ஒவ்வொரு நாளையும் நரகம் போல் எதிர்கொள்ளத் தயாராகி விழித்துள்ளார்.
17 வயதில் நடனத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. இருந்தும் அடுத்து நடந்த விபத்தால், மூட்டு வலி, தசைப்பிடிப்பு உண்டானது. மருத்துவர்கள் சொல்லையும் மீறி நடனமாடச் சென்ற நடாஷா மீண்டும் எழுந்தார். அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்த பலருக்கும் யோகா நிம்மதியைக் கொடுத்தது. விழு.. எழு.. ஓடு என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்த நடாஷாவும் பிபிசியின் செல்வாக்கு மிகுந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.