'எங்களை டிரஸ் இல்லாம நிக்க வச்சு'...'அத போட்டோ எடுத்து'... கொடுமைகளை அனுபவித்த மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அதிகாரமில்லாத புதிய மாணவர்களின் மீது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வக்கிரம் செலுத்தித் துன்புறுத்தும் செயலான  ராகிங்கை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு வகையில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

'எங்களை டிரஸ் இல்லாம நிக்க வச்சு'...'அத போட்டோ எடுத்து'... கொடுமைகளை அனுபவித்த மாணவர்கள்!

தவிர பள்ளி கல்லூரிகளில் இவற்றைக் கண்காணிக்க ராகிங் அல்லது மாணவர்கள் பாதுகாப்பு கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து நிகழும் கொடூரமான ராகிங் நிகழ்வுகள் பெற்றோர்களுக்கும் புதிய மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்து வருகின்றன.

அவ்வகையில் ஒடிசாவின் சம்பல்பூர் அருகே உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்துள்ள ராகிங் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் ஆடைகளின்றி நிற்கவைக்கப்பட்டும், இன்னும் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டும் ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் புகைப்படங்களாகவும் தகவலாகவும் இணையத்தில் வலம் வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் பிரேமானந்த் நாயக் உத்தரவிட்டுள்ளார்.

COLLEGESTUDENTS, RAGGING, BIZARRE, VIRAL