பெத்தவங்களுக்கு 'இத' செஞ்சா, இனி ஜெயில்ல களிதான் கிண்டனும்.. அரசின் அதிரடி மசோதா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகி, அந்தத் தனிக்குடும்பத்துக்குமான அர்த்தமாக, தற்போது வயதானவர்களற்ற குடும்பம் என்கிற அர்த்தம் உருவாகி வந்துள்ளது.

பெத்தவங்களுக்கு 'இத' செஞ்சா, இனி ஜெயில்ல களிதான் கிண்டனும்.. அரசின் அதிரடி மசோதா!

உலக அளவில், 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்களை கண்டுகொள்ளாத நாடாக இந்தியா இருப்பதாகவும், இந்தியாவில் இருக்கும் வயதானவர்கள் 12% பேர் என்றும்,  இவர்களில் 80% கிராமப்புற பகுதிகளையும் 40% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், இவர்களுள் 73% பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

பலரும் தம் குடும்பச்சுமை காரணமாகவோ, பெற்றோர்களுடன் வாழ்வதில் பிடிப்பில்லாமலோ, பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடியாததாலோ முதியோர் இல்லங்களில் கொண்டுசென்று சேர்க்கின்றனர். வீட்டில் இருக்கும் பேரப்பிள்ளைகள் தாத்தா, பாட்டிகளைப் பார்ப்பதே அரிதாகிப் போகவைக்கும்படியான செயல்களாகவும் இவை கருதப்படுகின்றன.

பல பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் சந்தோஷமாக வசிக்கச் செய்தாலும் கூட, பிள்ளைகள் தங்களைக் கைவிட்டதையோ அல்லது பிள்ளைகளை பிரிந்து துயரத்தையோ எண்ணி வேதனை கொள்கின்றனர்.  இதுபற்றி யோசித்த பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமாரின் தலைமையிலான கேபினட், பீகார் சமூக நலத்துறை கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஆலோசித்து ஒரு புதிய மாற்றத்தை புகுதியுள்ளது.

அதன்படி, பெற்றோர்களைக் கைவிடுபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் மசோதாவை பீகார் அரசு அதிரடியாக நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமல், வாழ்வாதாரத்துக்கு பெற்ற பிள்ளைகளை நம்பி மட்டுமே இருப்பதோடு, பெற்றோர்களின் நம்பிக்கையுமாகவும் பிள்ளைகள்தான் இருக்கிறார்கள் என்கிற நிலையில், பெற்றோர்களைக் கைவிடுபவர்களுக்கு சிறை தண்டனை என்கிற இந்த மசோதா அம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படம்: சித்தரிப்புப் படம்.

BIHAR, PROPOSAL, JAIL, PARENTS, ABANDON