சுட்டுக்கொன்றவர்களுக்கு தண்டனை.. உதவியாளரை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமேதி தொகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்திர சிங்கின் மரணச் செய்தியைக் கேட்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி திரும்பினார்.

சுட்டுக்கொன்றவர்களுக்கு தண்டனை.. உதவியாளரை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி ஆவேசம்!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இந்த மக்களவைத் தேர்தலிக் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஸ்மிருதி இரானி இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியை 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் பிரச்சார களத்தில் முக்கிய ஆளாக இருந்த, ஸ்மிருதியின் உதவியாளரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சுரேந்திர சிங், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அங்கு விரைந்த ஸ்மிருதி இரானி அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, அவரது பிரேதத்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் அவரது குடும்பத்தை உருகவைத்துள்ளது.

இதுபற்றி பேசிய சுரேந்திர சிங்கின் மகன், ஸ்மிருதி இரானியின் வெற்றியை அடுத்து தன் தந்தை யாத்திரை நடத்தியது பிடிக்காமல் அந்நிய சக்திகள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய பழைய எதிரிகள் அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட விசாரணையின் முடிவில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுரேந்திர சிங்கை சுட்டுக்கொன்றவர்களை கண்டுபிடித்து மரண தண்டனை பெற்றுத்தர அழுத்தம் தரப்போவதாகவும், அவ்வாறு செய்யப்போவதாக சுரேந்திர சிங்கின் குடும்பத்தாருக்கு, தான் வாக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.