'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட்வைஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கப்படவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறன்றன.

'அத நெனைச்சு பயம் தேவையில்ல பாய்ஸ்', இந்திய வீரர்களுக்கு ஜாம்பவானின் பாசிடிவ் அட்வைஸ்!

உலகக் கோப்பை தொடரை வெல்லப்போகும் அணியாக உலகின் முன்னணி வீரர்களாலும், கிரிக்கெட் ஜாம்பவன்களாலும் கணிக்கப்பட்டுள்ள அணி இந்திய அணி. இந்த சூழலில் தற்போது நிகழ்ந்து வரும் பயிற்சி ஆட்டங்களில் இந்தியா நியூஸிலாந்துக்கு எதிராக விளையாண்டதில் தோல்வி கண்டுள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாண்ட பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாண்ட இங்கிலாந்து அணியும் இந்த பயிற்சி ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளன. இந்த சூழலில், தோல்வி பயம் தேவையில்லை என்று முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுள் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்கு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய சச்சின்,  ‘உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஆட்டம் நம் கை மீறிச் செல்வதை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் பயிற்சி ஆட்டத்திலேயே இங்கிலாந்து பிட்ச்கள் பற்றி புரிந்துகொண்டு, அந்த அறிவை உலகக் கோப்பை தொடர் முழுவதும் அனுபவமாக்கிட வேண்டும். எனவே தோல்வி குறித்த பயம் தேவை இல்லாதது. பயிற்சி ஆட்டத்தின் ஒரு முடிவை வைத்து ஒரு அணியை மதிப்பீடு செய்வது சரியல்ல. பயிற்சி ஆட்டத்தில் பரிசோதனை முயற்சிகளும், முக்கிய வீரர்களை களமிறக்காமல் விளையாடுவதும் அவசியமாகிறது. எனினும் வெவ்வேறு வீரர்களின் காம்பினேஷன்களில் வெவ்வேறு மைதானங்களில் நிகழும் அனுபவம் பயிற்சி ஆட்டத்தில் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி  வெற்றி கொண்டது பற்றி பேசிய சச்சின்,  தான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஆப்கானிஸ்தான் அணியிடம் ஸ்பின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதால், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிகிறது என்றும், இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஆப்கானிஸ்தான் அணி சில சர்ப்ரைஸ் அனுபவங்களை ஆட்டத்தின் போது வழங்கும் என்றும் கூறியுள்ளார்.