'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் உள்ள கோட்டயம் அருகே உள்ளது குறிஞ்சான்குளம். இங்கு தாய் தந்தையருடன் வசித்துவந்த 17 வயது அபீல் ஜான்சன், அப்பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'!

இதனிடையே அப்பகுதியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஜூனியர் தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் `ஹேமர் த்ரோ' பிரிவுகளில் போட்டியாளர்களால் வீசப்பட்ட ஈட்டிகளையும், எறிகுண்டுகளையும் சேகரிக்கும் தன்னார்வலர் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அப்போது துரதிர்ஷ்டவசமாக, யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில்,  'ஹேமர் த்ரோ' போட்டியாளர் ஒருவர் வீசிய இரும்புக்குண்டு ஒன்று, எதிரில் நின்று பணியில் ஈடுபட்டிருந்த அபீலின் தலையில் மோதியதில், அபீலுக்கு மூளைக் காயம் உண்டானது. 3 கிலோ எடை கொண்ட இரும்புக் குண்டு வந்த வேகத்தில் தலையில் அடிபட்டதை அடுத்து அபீல் அங்கிருந்த கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அபீலின் மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னதோடு, தானும் இந்த துக்கத்தில் பங்கெடுப்பதாகத் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, விளையாட்டு நிகழ்வின் ஒருங்கிணைப்பார்கள் மீது சட்டப்பிரிவு 338-ன் கீழ வழக்குப்பதிவு செய்த போலீஸாரிடம், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் போட்டி நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

KERALA, ACCIDENT, SCHOOLSTUDENT, DEAD, SPORTS