'மச்சி.. அந்த பொண்ண..!!'.. 'ஸ்கூல்லயே இப்படியா?'.. மாணவர்களின் 'வாட்ஸ் ஆப் சாட்டிங்'.. 'நடுங்கும் மாணவிகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியா13 மற்றும் 14 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவர்கள் வாட்ஸாப்பில் பேசிக்கொண்ட ஆபாச சாட் பதிவுகளால், அவர்களின் பெற்றோர்களே பள்ளிகளில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
!['மச்சி.. அந்த பொண்ண..!!'.. 'ஸ்கூல்லயே இப்படியா?'.. மாணவர்களின் 'வாட்ஸ் ஆப் சாட்டிங்'.. 'நடுங்கும் மாணவிகள்'! 'மச்சி.. அந்த பொண்ண..!!'.. 'ஸ்கூல்லயே இப்படியா?'.. மாணவர்களின் 'வாட்ஸ் ஆப் சாட்டிங்'.. 'நடுங்கும் மாணவிகள்'!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/sexually-explicit-language-in-school-students-whatsapp-chat-thum.jpg)
சிறு வயதே ஆகியுள்ள பள்ளி மாணவர்கள் 2 பேர் மும்பையின் மிக உயர்ந்த மதிப்பும் தரமும் மிக்கதாக கூறப்படும் இண்டர்நேஷனல் போர்டு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இவர்களது வீட்டில் செல்போன்களை பயன்படுத்தும் வாய்ப்புக்கள் இருந்ததை அடுத்து அதில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.
இதனைக் கண்டறிந்த இந்த மாணவர்களின் பெற்றோர்கள், இதுபற்றி பள்ளியிலேயே புகார் அளித்துள்ளனர். இவர்களுள் ஒரு மாணவர் பள்ளியில் மாணவர்களை வழிநடத்தும் மாணவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள், ‘தங்கள் வகுப்பில் இருக்கும் மாணவி ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மேலும் பல பலவந்தமான, வல்லுறவு மனப்பான்மையை தூண்டும் வார்த்தைகளை பல்வேறு மாணவிகளை குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் ஆப் சாட்களில் பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்பள்ளியின் மாணவிகள் பள்ளிக்குப் போகவே பயப்படுகிறார்கள் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன. பெற்றோர்களும் இந்த சம்பவத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.