‘ஹைதராபாத் என்கவுன்ட்டர்’... 'பிரபல இந்திய வீராங்கனைகள் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்ட 4 பேரும் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘ஹைதராபாத் என்கவுன்ட்டர்’... 'பிரபல இந்திய வீராங்கனைகள் ட்வீட்!

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ‘நீதி வழங்கப்பட்டுள்ளது. திஷாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல், பாட்மிட்டன் வீராங்கனை செய்னா நெய்வால், ‘ஐதராபாத் போலீசாரின் சிறப்பான பணி. உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்’  என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, பிரபல மல்யுத்த வீராங்கனை கீதா போகத், ‘ஹைதராபாத் போலீசாருக்கு  தலை வணங்குகிறோம்’  என்று ட்வீட்டியுள்ளார். மேலும் பிரபல வீரர்களான யோகேஷ்வர் தத், கட்டா ஜ்வாலா, பபிதா போகத் உள்ளிட்டோரும் ட்வீட் செய்துள்ளனர்.

HYDERABAD, VETERINARIAN, DOCTOR