'சுகர் லெவல் கண்ட்ரோல்ல இல்ல...' 'ஸ்வீட் கடையை தேடி அலைந்த முதியவர், கடைசியில' நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போலீசார் ஒருவர் ரசகுல்லா வாங்கி கொடுத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவருக்கும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சுகர் லெவல் கண்ட்ரோல்ல இல்ல...' 'ஸ்வீட் கடையை தேடி அலைந்த முதியவர், கடைசியில' நெகிழ்ச்சி சம்பவம்...!

சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸின் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மருந்தகங்கள், மளிகை கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளனர். 

ராம்சந்திர பிரசாத் கேசரி என்னும் 80 வயது முதியவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அஸ்ரத்கஞ்ச்சில் கஸ்மந்தா குடியிருப்பில் வசித்து வருகிறார். மனைவியை இழந்த இவரின் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ராம்சந்திர பிரசாத்திற்கு கடந்த 18 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வருகிறது. இதன் விளைவாக இவருக்கு ஹைபோகிளைசிமியா என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை சமன் செய்யும் வகையில் ராம்சந்திர பிரசாத் தினமும் இனிப்பு வகையான ரசகுல்லாவை சாப்பிடுவார்.

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கால் எந்த இனிப்பு கடைகளும் திறக்கப்படவில்லை. 4 நாட்கள் தொடர்ந்து ரசகுல்லா சாப்பிட முடியாததால் முதியவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ஏற்கனவே தனக்கு தெரிந்த போலீசாரான சந்தோஷ் சிங்கை தொடர்புக்கொண்டுள்ளார்.

முதியவரின் நிலையை உணர்ந்த சந்தோஷ் சிங் உடனே தெரிந்தவர்கள் மூலம் இனிப்புகளை வாங்கி, முதியவரிடன் வீட்டிற்கு சென்று ரசகுல்லாவை வழங்கியுள்ளார். காவல் அதிகாரி சந்தோஷ் சிங் வாங்கி வந்த ரசகுல்லாவிலிருந்து 4 எடுத்து உண்ட முதியவர் ராம்சந்திர பிரசாத் கேசரி மிகுத்த சந்தோசத்தோடு காணப்பட்டார். மேலும் அவரின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

RASAGULLAH