'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊடரங்கு உத்தரவு சமயத்தில் பெங்களூரிலுள்ள டிராஃபிக் போலீசார் ஏற்படுத்திய கொரோனா விழிப்புணர்வு முறை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் அநாவசியமாக பைக்குகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர். அப்படி சுற்றித் திரிபவர்களுக்கு ஆங்காங்கே பணியிலுள்ள போலீசார் தோப்புக்கரணம், தேர்வு எழுத வைத்தல் போன்ற பல நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் சில போலீசார், கொரோனா குறித்த பாடலை பாடியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூர் டிராஃபிக் போலீசார், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வினோதமான முறையில் கையாண்டுள்ளனர். அதாவது, வைரஸ் போன்ற கவசம் ஒன்றை தலையில் வைத்துள்ள போலீசார், பைக்கில் சுற்றி திரிபவர்கள் மீது ஓடி சென்று தொற்றிக் கொள்வது போன்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
பெங்களூர் போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோ, இணையவாசிகளின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
We are the first country to have a live video of virus catching a man pic.twitter.com/esuhfgdN6M
— Rahul Roushan (@rahulroushan) March 31, 2020