‘கொரோனாவால பாதிக்கப்பட்டவர் இத கண்டிப்பா ஃபாலோ பண்ணணும்’.. ‘இல்லன்னா அவர் மூலம் 406 பேருக்கு வைரஸ் பரவும்’.. வெளியான் ஷாக் ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஊரடங்கை பின்பற்றாவிட்டால் அவர் மூலம் 406 பேருக்கு பரவும் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், ‘கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ கவின்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றினால் 30 நாட்களில் குறைந்தது 406 பேருக்கு அவரால் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.